உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுனின் புஷ்பா ரூ.300 கோடி வசூல் சாதனை

அல்லு அர்ஜுனின் புஷ்பா ரூ.300 கோடி வசூல் சாதனை

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா என பலர் நடிப்பில் உருவான படம் புஷ்பா தி ரைஸ். இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் வசூலைக் குவித்திருக்கிறது. அந்த வகையில் புஷ்பா இப்போது உலக அளவில் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இது இந்த கோவிட் காலத்தில் வியக்க வைக்கும் சாதனையாகும். குறிப்பாக ஹிந்தி வட்டாரத்தில் இப்படம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது புஷ்பாவின் ஹிந்தி பதிப்பு ரூ. 57 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதோடு ஒரு நாள் வசூலில் இந்த படம் 6.10 கோடிகளை வசூலித்து இன்னொரு சாதனையையும் செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த புஷ்பா படம் ஹிந்தி மார்க்கெட்டில் ரூபாய் 75 கோடி வரி வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வசூலித்தால் ஹிந்தி டப்பிங் மார்க்கெட்டில் அதிகப்படியாக வசூல் செய்த படம் என்ற பட்டியலிலும் புஷ்பா இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !