விஷாலுக்கு ரூ 500 அபராதம் : நீதிமன்றம் அதிரடி
ADDED : 1370 days ago
நடிகர் விஷால் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016ம் வருடம் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் விஷால் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கான வருமான வரி கட்டாமல் இருந்ததையும் அதற்கான ஆதாரங்களையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் ஆஜராகும்படி விஷாலுக்கு வருமான வரித்துறை பல முறை சம்மன் அனுப்பியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை.
கிட்டத்தட்ட பத்து முறை அவர் தன்னைத் தேடி வந்த சம்மன்களை நிராகரித்துள்ளார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் முறையிட்டதன் பேரில் இதை விசாரித்த நீதிமன்றம் நேரில் ஆஜர் ஆகாததற்காக விஷாலுக்கு ரூ 500 அபராதம் விதித்துள்ளது.