சிபிஐ படக்குழுவினரை விதவிதமாக போட்டோ எடுத்த மம்முட்டி
மம்முட்டியின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம் ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு. கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து வருடங்களில் அந்தப்படத்தின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் ஐந்தாம் பாகம் சிபிஐ 5 என்கிற பெயரில் உருவாகி வருகிறது. நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது இந்த படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. பொதுவாகவே மம்முட்டி புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர். அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சிபிஐ 5 படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் பலரையும் அங்கிருந்த ஸ்டில் போட்டோகிராஃபரின் கேமராவை வாங்கி வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை இயக்குனர் மது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.