உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெப் தொடர் இயக்கி வரும் ஏ.எல்.விஜய்

வெப் தொடர் இயக்கி வரும் ஏ.எல்.விஜய்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தலைவி படத்தை அடுத்து ஒரு வெப் தொடரை இயக்கி வருக்கிறார் ஏ.எல். விஜய். இந்த தொடரில் பசங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஸ்ரீராம் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த தொடரின் படப்பிடிப்பு முடிவடைகிறது. மேலும் இந்த வெப் தொடர் ஒரு ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !