கொரோனாவை புரட்டும் குறும்படங்கள்
ADDED : 1417 days ago
ஐந்து கதைக்களை கொண்ட புத்தம் புதுக்காலை விடியாதா ஆந்தாலஜி படத்தின் தொகுப்பின் டிரைலர் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் துன்பங்களுடன் எதிர்கொண்ட நம்பிக்கை, மனஉறுதி உள்ளிட்ட விஷயங்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். ஐஸ்வர்யா லட்சுமி, நதியா, கவுரிகிஷன், லிஜோமோல் ஜோஸ், அர்ஜுன்தாஸ், ஜோஜு ஜார்ஜ், சனந் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர் அந்தோணி, சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர். ஜன. 14ல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.