மீண்டும் வேகம் எடுக்கும் ஜோதிகா?
ADDED : 1377 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்த ஜோதிகா, சூர்யாவுடனான திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து சிலகாலம் ஓய்வெடுத்தார். பிள்ளைகள் வளர்ந்து பிறகு ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகாவுக்கு 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி உள்ளிட்ட படங்கள் கம்பேக்காக அமைந்தன.
ஜோதிகா நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே படம் ஓடிடியில் வெளியானது. கொரோனா காரணமாக சிலகாலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். வசனகர்த்தா பொன்.பார்த்திபன் சொன்ன கதையை ஓகே சொல்லி வைத்துள்ளார். அதையடுத்து இயக்குனர் ப்ரியா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறாராம்.