லதா மங்கேஷ்கருக்கு கொரோனா - ஐசியுவில் அனுமதி
ADDED : 1411 days ago
மும்பை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு(92) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது மருமகள் கூறுகையில், லதா மங்கேஷ்கர் நலமாக உள்ளார். வயது முதிர்வு காரணமாக முன்னெச்சரிக்கை காரணமாக ஐசியு., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவின் பாடும் வானம் பாடி என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.
லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த ரசிகர்களும், திரையுலகினர் பலரும் அவர் விரைந்து குணமாகி வீடு திரும்ப வேண்டும் என கடவுளிடம் வேண்டி வருகின்றனர்.