சுசி கணேசன் படத்துக்கு இளையராஜா இசையா?: சின்மயி கேள்வி
ADDED : 1372 days ago
பைவ் ஸ்டார், கந்தசாமி, திருட்டு பயலே படங்களை இயக்கிய சுசி கணேசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் வஞ்சம் தீர்த்தாயடா. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இதற்காக அண்மையில் சுசி.கணேசன் இளையராஜாவை சந்தித்து முன்பணமும் வழங்கிச் சென்றார்.
இந்த நிலையில் சுசி கணேசன் படத்திற்கு இளையராஜா இசை அமைப்பதற்கு பாடகி சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காரணம் தமிழ்நாட்டில் சின்மயி தொடங்கிய மீ டூ இயக்கத்தின் மூலம் இயக்குனர் லீனா மணிமேகலை சுசி கணேசன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து சின்மயி, ‛‛ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவருடன் பணியாற்றுகிறோம் என்பது ராஜா சாருக்கோ அல்லது அவரது குழுவுக்கோ தெரியாதா'' என்று கேள்வி கேட்டுள்ளார்.