சசி இயக்கும் நூறு கோடி வானவில்
ADDED : 1363 days ago
தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும் தனித்த முத்திரையுடன் இருப்பவர் சசி. சொல்லாமலே, ரோஜாகூட்டம், டிஷ்யூம், ஐந்து ஜந்து ஐந்து, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை என தரமான படங்களை தந்தவர். அவர் தற்போது இயக்கி வரும் படம் நூறு கோடி வானவில்.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இப்படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இது ஒரு வித்தியாசமான காதல் கதையாக உருவாகிறது.