ரவிதேஜா படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி
ADDED : 1358 days ago
கொரோனா மூன்றாவது அலை தீவிரமாகி வரும் நிலையில் கூட்டம் கூடும் நிகழ்வுகளை பலரும் தவிர்த்து வருகின்றானர். ஆனால் சினிமாவை பொறுத்தவரை இதுபோன்ற நிகழ்ச்சிகள் தான் படத்திற்கான புரமோஷன்களாக அமையும். அந்தவகையில் சமீபத்தில் தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் ராவணாசுரன் என்கிற படத்திற்கான துவக்க விழா பூஜை விமரிசையாக நடந்தது.
கொரோனா தொற்று பயத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நடிகர் சிரஞ்சீவி இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படத்தை துவங்கி வைத்தது மிகப்பெரிய ஆச்சர்யம். இந்தப்படத்தை சுதீர் வர்மா இயக்குகிறார். இதில் லாயராக ரவிதேஜா நடிக்க அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.