தமிழ் பாடகர் ஆனார் மலையாள நடிகர் துல்கர் சல்மான்
ADDED : 1359 days ago
நடன இயக்குனர் பிருந்தா முதன் முதலாக இயக்கும் படம் ஹே சினாமிகா. தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால் அதிதி ராவ் நடித்துள்ளனர். இது ஒரு முக்கோண காதல் கதை என்கிறார்கள். இது துல்கர் சல்மானின் 33வது படமாகும். இதில் துல்கர் ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார். 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
நேரடி தமிழ் படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மான் முதன் முதலாக தமிழில் பாடி பாடகராகவும் ஆகியுள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலை பாடி உள்ளார். அந்த பாடல் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகி உள்ளது. இந்தப் பாடல் 45 நிமிடங்களிலேயே பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. படம் அடுத்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.