ஆர்.ஜே பாலாஜி படத்தில் இணைந்த பிக்பாஸ் ஷிவானி நாராயணன்
ADDED : 1405 days ago
காமெடியனாக நடித்து வந்த ஆர்.ஜே .பாலாஜி எல்கேஜி படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை நயன்தாராவை வைத்து இயக்கி நடித்தார். இந்தநிலையில் விரைவில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஆர்ஜே பாலாஜி. இந்த படத்தில் பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்கிறார். அதையடுத்து ஆர்.ஜே.பாலாஜியுடன் தான் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் ஷிவானி.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வரும் ஷிவானி, பொன்ராம் இயக்கும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது மூன்றாவதாக ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.