ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்ட வனிதா
ADDED : 1362 days ago
எதையாவது செய்தோ, பேசியோ தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொள்ளும் வனிதா, அதை பயன்படுத்தியே சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார். பவர் ஸ்டாருடன் ஒரு படத்தில் நாயகியாக நடிக்கும் அவர், இன்னொரு படத்தில் வில்லியாக நடிக்கிறார். இந்த நிலையில் காத்து என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.
சண்டை இயக்குனர் தவசிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'காத்து' என்கிற படத்திற்காக கானா பாலா பாடிய பாடலுக்கு வனிதா ஆட்டம் போட்டுள்ளார். இதற்காக அவருக்கு உரிய சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம்.