அம்மன் தொடரில் இணைந்த ஆனந்தி அஜய்
ADDED : 1414 days ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஹிட் ஆன சில தொடர்களில் அம்மன் தொடரும் ஒன்று. அமல்ஜித், பவித்ரா கவுடா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடர் புதிய மாற்றங்களுடன், புதிய நடிகர்களுடன் புதிய பரிமாணத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல சீரியல் நடிகை நிவிஷா சமீபத்தில் தான் இந்த தொடரில் இணைந்தார். 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் விஜய் டிவி நடிகையான ஆனந்தி அஜய் இணந்துள்ளார். விஜய் டிவியில் நடிகர்கள் சிலர் சமீப காலங்களில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு மாறி வருகின்றனர். ஆர் ஜே செந்தில், பரீனா ஆசாத்தை தொடர்ந்து தற்போது ஆனந்தியும் கலர்ஸ் தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மன் தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.