தமிழில் அகண்டா
ADDED : 1348 days ago
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் அகாண்டா. என்.டி.பாலகிருஷ்ணா நடித்த படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம். தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி அதிலும் சாதனை படைத்து வருகிறது.
போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பிரக்யா ஜெய்ஸ்வால் ஹீரோயின். தமன் இசை அமைத்துள்ளார். இதில் என்.டி பாலகிருஷ்ணா ஊருக்கு நல்லது செய்யும் இளைஞர் மற்றும் அகோரி வேடங்களில் நடித்துள்ளார்.
இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது. 50 சதவிகித இருக்கை மற்றும் ஞாயிறு ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு தியேட்டர்களில் படங்கள் எதுவும் வெளியிடப்படாததால் அந்த கேப்பில் அகாண்டாவை வெளியிடுகின்றனர்.