மராட்டிய படத்தில் அறிமுகமாகும் நிமிஷா சஜயன்
ADDED : 1395 days ago
மலையாள சினிமாவில் நடிப்பு ராட்சஷி என்று அழைக்கப்படுகிறவர் நிமிஷா சஜயன். ஒரு குபுரசித்த பையன் படத்திற்காக கேரள அரசு விருதும், சோலா, தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்திற்காக பல விருதுகளையும் பெற்றவர். இது தவிர ஒன், நாயாட்டு, மாலிக், மாங்கல்யம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது வீ ஆர் என்ற ஹிந்தி படத்திலும், புட்பிரிண்ட் ஆன் வாட்டர் என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் 'ஹவாஹவாய்' என்ற படத்தின் மூலம் மராட்டிய மொழியில் அறிமுகமாகிறார். பிரபல மராட்டிய இயக்குனர் மகேஷ் திலேகர் இயக்குகிறார்.