உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் படத்தின் ரீமேக்கில் ஷாருக்கான்

கமல் படத்தின் ரீமேக்கில் ஷாருக்கான்

கடந்த 2000ம் ஆண்டில் கமல்ஹாசன் இயக்கி நடித்து வெளியான படம் ஹேராம். இந்த படத்தில் கமலுடன் ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி, நாசர் உள்பட பலர் நடிக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதோடு இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் சம்பளமே பெற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் ஹேராம் படம் வெளியாகி 22 வருடங்களுக்கு பிறகு அப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து, ஷாருக்கான் நடிக்கப் போகிறார். அதற்காக இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை அவர் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுப்பற்றி அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள். ஏற்கனவே ஹேராம் படம் ஹிந்தியிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !