உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய்பல்லவி

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய்பல்லவி

தமிழில் மாரி-2 படத்திற்கு பிறகு பாவ கதைகள் ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார் சாய் பல்லவி. அதையடுத்து தெலுங்கில் நானியுடன் அவர் அடித்த ஷ்யாம் சிங்கா ராய் என்ற படம் வெளியானது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 21ஆவது படத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டாக்டர் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகிறது. அதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அந்த படத்தை முடித்ததும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார். இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !