உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமணம் செய்தது உண்மையா ? ; லாவண்யா திரிபாதி பதில்

திருமணம் செய்தது உண்மையா ? ; லாவண்யா திரிபாதி பதில்

தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாவண்யா திரிபாதி அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். அப்படி சமீபத்தில் ரசிகர்களுடன் அவர் பேசும்போது அவர் திருமணம் செய்துகொண்டது உண்மையா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்

ஆரம்பத்தில், எனது திருமணம் குறித்து வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று லாவண்யா திரிபாதி பொறுமையாக பதில் கூறினார். ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து அதுபற்றியே கேள்வி எழுப்பவே, “என் திருமணம் பற்றி என்னைவிட ரசிகர்களாகிய உங்களில் பலருக்குத்தான் அதிக விபரம் தெரிந்திருக்கிறது” என்று கிண்டலாக கூற, அதன்பிறகுதான் ரசிகர்கள் அப்படி கேட்பதை நிறுத்தினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !