உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏப்ரலுக்கு தள்ளிப்போன நயன்தாரா படம்

ஏப்ரலுக்கு தள்ளிப்போன நயன்தாரா படம்

நயன்தாரா நடித்து, தயாரித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். அவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, டான்ஸ் மாஸ்டர் கலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.

கொரோனா பரவல் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாக கடந்த டிம்பர் மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா 3வது அலை காரணமாக வெளிவரவில்லை. இந்த நிலையில் படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இதனிடையே படத்தின் டீசர் பிப்., 11ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !