வெற்றிமாறன் திரைக்கதையில் படம் இயக்கும் அமீர்!
மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அமீர், யோகி, வட சென்னை போன்ற படங்களில் நடிகராகவும் உருவெடுத்தார். அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்கப் போகிறார். இந்நிலையில் ஆர்யா நடிப்பில் சந்தனத்தேவன் என்ற ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அந்த படம் பின்னர் கிடப்பில் போடப்பட்டது.
அதையடுத்து நாற்காலி என்ற படத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அந்த செய்தியும் அடங்கி விட்டது. இந்த நிலையில் தற்போது வெற்றிமாறனின் திரைக்கதையில் தனது புதிய படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் அமீர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு திரைப்படத்தில் இன்னொருவரின் பார்வையும் சேரும்போது அந்தப்படம் மேலும் அழகாகும் என்று தெரிவித்திருக்கும் அமீர், இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலை வெளியிடவில்லை.