உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் இணைந்த 3 ஆஸ்கர் வின்னர்கள்

பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் இணைந்த 3 ஆஸ்கர் வின்னர்கள்

ஒத்த செருப்பு படத்தை தயாரித்து, இயக்கி தான் மட்டுமே நடித்தார் பார்த்திபன். ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்ற இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அதையடுத்து தற்போது இரவின் நிழல் என்ற படத்தை சிங்கிள் ஷாட்டில் இயக்கியிருக்கிறார் பார்த்திபன். இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கும் தகவல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராக கட்டா லங்கோ லியான் என்பவரும், ஒலி கோர்ப்புக்கு கிரைக் மான் என்பவரும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இதுகுறித்த தகவலை இரவு நேரம் படத்தை தயாரிக்கும் டுவீட் இன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அந்தவகையில் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் மூன்று ஆஸ்கர் வின்னர்கள் இடம் பெற்றுள்ளார்கள். அதோடு இப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாக உள்ளது என்றும் ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !