உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குதிரைவால் மார்ச் 4-ல் ரிலீஸ்

குதிரைவால் மார்ச் 4-ல் ரிலீஸ்

நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கி முடித்துள்ள பா. ரஞ்சித் அடுத்தபடியாக விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தொடர்ந்து படங்களை தயாரித்து வரும் பா. ரஞ்சித், தற்போது கலையரசன் நாயகனாக நடித்துள்ள குதிரைவால் என்ற படத்தையும் தயாரித்து இருக்கிறார்.

மனோஜ் லியோன் ஜாசன் மற்றும் சியாம் சுந்தர் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அஞ்சலி பட்டேல் நடித்திருக்கிறார். பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படம் வருகிற மார்ச் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் , மேஜிக்கல் சினிமாவாகவும் இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் இது புதிய முயற்சியாக இருக்கும் என நீலம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !