மும்பை ரெட் லைட் ஏரியாவுக்கு சென்ற ஆலியா பட்
ADDED : 1340 days ago
ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஆலியா பட். இவர் ஹிந்தியில் தயாராகியுள்ள கங்குபாய் கத்தியவாடி என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ளது. பாலியல் தொழிலாளி ஒருவர் அரசியலுக்கு வரும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாலியல் தொழிலாளியாகவும், அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார் ஆலியா பட்.
இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியாவிற்கு சென்ற ஆலியா பட், அங்குள்ள பாலியல் தொழிலாளிகளுடன் பேசி, பழகி அவர்களது நடை, உடை, பாவனைகளை உள்வாங்கி அதை இந்த படத்தில் பிரதிபலித்திருக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.