நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை!
ADDED : 1331 days ago
தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நேஹா. கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் பைரவி சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல ஹிட் தொடர்களில் நடித்து வந்த நேஹா, தற்போது விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது பிறந்தநாளை பாக்கியலெட்சுமி சீரியல் குழுவினர் வித்தியாசமாக கொண்டாடி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கம்பம் மீனா, திவ்யா கணேஷ், வீஜே விஷால் ஆகியோர் கலந்து கொண்டு நேஹாவை படகின் மூலம் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இதை வீடியோவாக எடுத்து கம்பம் மீனா செல்லமுத்து பகிர, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.