கண்மணி மனோகரனின் அமுதாவும்...... - ஜீ தமிழில் புதிய சீரியல்
ADDED : 1444 days ago
ஜீ தமிழ் டிவி பல புத்தம் புதிய தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் இப்போது கண்மணி மனோகரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் புதிய சீரியலைத் தொடங்கியுள்ளது. இதற்கான புரொமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் தாயின் மறைவால் படிப்பை நிறுத்திய அமுதா கல்விக்காக ஏங்கும் குணாதிசயங்களை உடையவராக உள்ளார். எனவே அமுதா தனது படிப்பைத் தொடரவும் தனது கனவுகளை அடையவும் ஒரு ஆசிரியரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள். ஆனால் அமுதாவுக்கு மட்டும் பெரிய கனவு இல்லை, இன்னொருவரும் கனவு காண்கிறார். அது என்ன என்பதை இந்த புரொமோ வீடியோ சித்தரிக்கிறது. நாயகனாக அருண் பத்மநாபன் நடிக்கிறார்.
அமுதாவும் ______ என்ற தலைப்புக்கு பொருத்தமான பெயரை யூகித்துக்கொண்டே இருங்கள் மற்றும் நிகழ்ச்சி பற்றிய கூடுதல் விவரங்களை அறிய காத்திருங்கள்.