கார்த்தி படத்தில் வில்லனாகும் விஜய் சேதுபதி?
ADDED : 1331 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரவலாக நடித்து வரும் விஜய் சேதுபதி தமிழில் ரஜினி நடித்த பேட்ட, விஜய் நடித்த மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்தவர், தற்போது கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 12 வருடங்களுக்கு முன்பு சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.