அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட அட்லி - பிரியா
ADDED : 1368 days ago
மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு பல சினிமா பிரபலங்கள் நடனமாடி வீடியோ வெளியிட்டதை போன்று இப்போது பீஸ்ட் படத்தில் விஜய் - பூஜா ஹெக்டே நடனமாடி சமீபத்தில் வெளியிடப்பட்ட அரபி குத்து பாடலுக்கும் பல சினிமா பிரபலங்கள் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு சமந்தா நடனமாடி ஒரு வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லியும் தனது மனைவி பிரியா உடன் இணைந்து நடனம் ஆடி இருக்கிறார். இவர்களுடன் ஆர்ட் டைரக்டர் முத்து ராஜூம் ஆடி உள்ளார். இந்த வீடியோ வைரலானது.