உலகை தலைகீழாக பார்க்கும் வரலட்சுமி
ADDED : 1322 days ago
தமிழ், தெலுங்கில் நாயகி, வில்லி என நடித்து வரும் வரலட்சுமி தற்போது தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா, சமந்தாவுடன் யசோதா படங்களில் நடிக்கிறார். தமிழில் யானை படத்திலும் நடித்துள்ளார். தனது உடல் எடையையும் ஓரளவு குறைத்து இருக்கும் வரலட்சுமி தொடர்ந்து சோசியல் மீடியாவில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தலைகீழாக யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன் உடன், ‛‛முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள். சில சமயங்களில் உலகையே தலைகீழாகப் பார்ப்பது நல்லது. என்னை மீண்டும் யோகாவிற்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி. என்னை இதைச் செய்ய வைத்த பயிற்சியாளருக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார் வரலட்சுமி. இந்த வீடியோ ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.