நம்பர் ஒன் நடிகையாக ஆசைப்படவில்லை : சமந்தா
ADDED : 1318 days ago
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த சமந்தா, தற்போது பாலிவுட், ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு அவரது சினிமா மார்க்கெட் ஏறுமுகத்தில் செல்ல தொடங்கியிருக்கிறது. அதோடு புஷ்பா படத்தில் சிங்கிள் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய சமந்தா, சமீபத்தில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்ற டீசர்ட் அணிந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில் நம்பர் ஒன் நடிகையாகும் ஆசை உள்ளதா? என்று ரசிகர்கள் அவரிடத்தில் கேட்ட கேள்விக்கு, அப்படியொரு ஆசை இல்லை என்று தெரிவித்துள்ள சமந்தா, நிறைய நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.