யானை மே 6ஆம் தேதி வெளியாகிறது
ADDED : 1314 days ago
அருண் விஜய் நடித்துள்ள சினம், பார்டர் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், ராதிகா, சமுத்திரகனி, யோகிபாபு, அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் பாடல்களும் வெளியிடப்பட்டன . இந்நிலையில் தற்போது வருகிற மே 6ஆம் தேதி யானை படத்தை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.