புதிய காமெடி படத்தில் சிவா
ADDED : 1311 days ago
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் படம் ‛சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்'. இதில் மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடிக்கிறார்கள். விக்னேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதற்கிடையில் 'தில்லுக்கு துட்டு' இயக்குநர் ராம் பாலா இயக்கத்தில், 'இடியட்' படத்திலும், இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் 'காசேதான் கடவுளடா' படத்திலும் நடித்து முடித்துள்ளார் சிவா.