உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புனித் ராஜ்குமாருக்கு மணி மண்டபம்

புனித் ராஜ்குமாருக்கு மணி மண்டபம்

பிரபல கன்னட நடிகர் மற்றும் அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் அம்பரீஷ், தமிழில் ரஜினிகாந்துடன் தாய் மீது சத்தியம், பிரியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அம்பரீஷின் மனைவியான சுமலதாவும் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர். தற்போது மாண்டிய தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

அம்பரீஷ் கடந்த 2018ம் ஆண்டு மரணம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோவில் மணிமண்டபம் கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி மணிமண்டப அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட கர்நாடக முதல்வர் பசவப்பா பொம்மை, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கும் விரைவில் மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !