பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்
ADDED : 1359 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இரண்டு மனைவிகளை கல்யாணம் செய்து கொண்டு நாயகன் கோபி படும் பாடும், கோபியால் குடும்பத்தினர் படும் கஷ்டங்களும் என சென்டிமென்ட்டாக பேமிலி ஆடியன்ஸை சூப்பராக கவர் செய்து வருகிறது. தற்போது இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யன், பாக்கியாவின் மூத்த மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஷபானாவுடன் திருமணம் ஆனது. இந்நிலையில், அவர் இந்த தொடரை விட்டு விலகியுள்ளார். மேலும், செழியன் கதாபாத்திரத்தில் விகாஷ் சம்பத் என்ற நடிகர் நடிக்கவுள்ளார். இவர் 'ராஜபார்வை' என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.