சிம்பு படத்தில் இணையும் பஹத் பாசில்
ADDED : 1376 days ago
பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் த.மிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் நடித்தவர் இப்போது தமிழில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்திலும் நடிக்கப் போகிறார்.
இந்நிலையில் அடுத்தபடியாக கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கொரோனா குமார் என்ற படத்திலும் பஹத் பாசில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார்.