மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1305 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1305 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1305 days ago
கலர்ஸ் தமிழ் சேனல் சமீபகாலமாக புத்தம் புதிய தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் நீதிக்காக போராடும் ஒரு விதவைத் தாயின் கதையை சித்தரிக்கும் “இது சொல்ல மறந்த கதை” என்ற தொடரை இன்று (மார்ச் 7) முதல் ஒளிபரப்புகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு இதனை காணலாம்.
இரு குழந்தைகளைக் கொண்ட ஒரு இளம் விதவையான சாதனாவின் வாழ்க்கை சம்பவங்களையும் மற்றும் உயிரிழந்த அவளது கணவனின் நற்பெயரை சீரழித்த ஒரு வழக்கில் அவர் தவறு செய்யாத நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கான அவளின் போராட்டமும்தான் தொடரின் கதை. இதில் சாதனாவாக ரச்சிதா மகாலட்சுமி நடிக்கிறார். விஷ்ணு சாதனாவுக்கு உதவும் பத்திரிகையாளராக நடிக்கிறார்.
தொடர் குறித்து ரட்சித மகாலட்சுமி கூறியதாவது: நியாயமான, கனிவான, தைரியமான மற்றும் விவேகமான பெண்ணாக உருவாக்கப்பட்டிருக்கும் சாதனா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு அதிக உற்சாகமளிக்கிறது. அவள் மனதில் பட்டதைப்பேச சிறிதளவும் அஞ்சாதவள், அவளது குடும்பம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றினால் எதிர்கொள்கின்ற சவால்களினால் துவண்டுவிடாது, ஒருபோதும் நம்பிக்கையை இழக்காத பெண்ணாக சாதனா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட ஒரு முடிவை எடுக்க ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமையிருக்கிறது என்ற செய்தியினை வலியுறுத்திச் சொல்லும் தொடராக இது இருக்கும். என்றார்.
1305 days ago
1305 days ago
1305 days ago