பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் மிட்செல் ரியான் காலமானார்
ADDED : 1407 days ago
பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் மிட்செல் ரியான். லெதர் வெப்பன், லையர் லையர், மேக்னம் போர்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார், இவர் நடித்த டார்க் ஷேடோஸ், தர்மா அண்ட் கிரேக் வெப் தொடர்கள் உலக புகழ் பெற்றவை. 88 வயதான மிட்செல் முதுமை காரணமாக நடிப்பில் இருந்து விலகி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இதயநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.