எப்படி இருந்த பிரியங்கா... இப்படி ஆயிட்டாங்களே
ADDED : 1304 days ago
தமிழில் அறிமுகமாகி, பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாகி இப்போது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறவர் பிரியங்கா சோப்ரா. இந்திய நடிகைகளில் அதிகமான ரசிகர்களையும், அதிக சம்பளத்தையும் கொண்டவர்.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது கவர்ச்சியான படங்களை அடிக்கடி பதிவிட்டு அதற்கென தனி ரசிகர்களை வைத்திருப்பவர், ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். வாடகைத்தாய் மூலம் ஒரு குழந்தையும் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் பிரியங்கா சோப்ராவின் படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். பிட்னசில் அதிக கவனம் செலுத்தும் பிரியங்கா உடல் பெருத்து காணப்படுகிறார். ஒரு வேளை ஏதாவது ஹாலிவுட் படத்திற்காக வெயிட் போட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள்.