அன்றும்... இன்றும்... - வைரலாகும் ரம்யாவின் புகைப்படங்கள்
ADDED : 1308 days ago
தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமான தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் வீஜே ரம்யா. தற்போது சின்னத்திரையை காட்டிலும் சினிமாவில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் சில பழைய புகைப்படங்களை வெளியிட்டார். 16 வருடங்களுக்கு முன்பு ஜெயா டிவி வீஜே ஆடிஷனுக்காக புடவை மற்றும் மாடர்ன் டிரெஸ்ஸில் அவர் எடுத்துள்ள புகைப்படங்களை சமீபத்திய புகைப்படங்களுடன் கம்பேர் செய்து வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும் 'ரம்யா மேடம் இது உங்க அம்மாவா?' 'போக போக வயச குறைச்சிட்டே போறீங்க' என கமெண்ட் அடித்து வருகின்றனர். அந்த அளவுக்கு அசத்தலாக மாறி உள்ளார் வீஜே ரம்யா. பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வரும் வீஜே ரம்யா தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.