கலையரசனின் குதிரைவால் டிரைலர் வெளியானது!
ADDED : 1323 days ago
பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கின் நண்பராக நடித்தவர் கலையரசன். அதன்பிறகு பல படங்களில் நாயகனாக நடித்தவர் தற்போது பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஷன்ஸ் தயாரித்துள்ள குதிரைவால் என்ற படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். மார்ச் 18ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உலகம் ஒரு மேத்தமெடிக்ஸை வைத்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற தொடங்கும் இந்த டிரைலரில் நிஜ வாழ்க்கையும் கனவும் கலந்து சித்தரிக்கப்பட்டுள்ளது. அதோடு கலையரசனுக்கு குதிரைவால் முளைத்துவிடுகிறது. இதனால் அவருக்கு ஏற்படும் சிக்கல்களும் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் கலையரசன் உடன் அஞ்சலி பட்டேல் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மனோஜ் - சியாம் இயக்கி உள்ளார்கள்.