சந்தானத்துக்கு ஜோடியாகும் கன்னட நடிகை!
ADDED : 1305 days ago
டிக்கிலோனா படத்தையடுத்து ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இப்படம் 2019ம் ஆண்டு ஏஜென்ட் சாய் சீனிவச அத்ரேய என்ற பெயரில் தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை அடுத்து பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கும் ஒரு காமெடி படத்தில் நடிக்கிறார் சந்தானம். இந்தப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அருண் விஜய் நடித்த தடம், ஜீவா- சிவா நடித்த கோல்மால் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த கன்னட நடிகை தன்யா ஹோப் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.