சிரஞ்சீவி படத்தில் ரவிதேஜா
ADDED : 1299 days ago
ஆச்சார்யா, காட்பாதர், போலா சங்கர் படங்களில் நடித்து வரும் சிரஞ்சீவி அடுத்து விசாகப்பட்டினத்தை பின்னணி கதையாகக்கொண்ட ஒரு படத்தில் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் மற்றுமொரு முன்னணி நடிகராக வலம் வரும் ரவிதேஜா சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக இவருக்கு கணிசமான தொகையும் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.