'மழை பிடிக்காத மனிதன்' டப்பிங் தொடங்கியது
ADDED : 1349 days ago
விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சரத்குமார், டாலி தனஞ்செயா, சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர் . சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் இன்று டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது . விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.