நெல்சனிடத்தில் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்ட லோகேஷ்
ADDED : 1306 days ago
விஜய், பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்திருக்கிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடத்தில் பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என்பது குறித்து சோசியல் மீடியாவில் கேள்வி விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமாரின் பிறந்தநாளுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்தவர், பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ் என்று கேட்டுள்ளார். ஆக, விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அவரை வைத்து ஏற்கனவே படம் இயக்கியவர்களும் பீஸ்ட் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து ஆர்வத்தில் இருப்பதையே இது வெளிப்படுத்தியுள்ளது.