பரத் 50 படம் ஆரம்பம்
ADDED : 1313 days ago
பாய்ஸ் படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக அறிமுகமாகி அதன்பின் பல படங்களில் நடித்த பரத் இப்போது 50வது படத்தை எட்டி உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பல படங்களுக்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா இயக்கி இயக்குனராக அறிமுகமாவதோடு, தயாரிக்கவும் செய்கிறார். பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரில்லர் கலந்த பேமிலி டிராமா படமாக உருவாகிறது. முத்தையா ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரத், வாணிபோஜன், இயக்குனர் ஆர்.பி.பாலா, தயாரிப்பாளர் எஸ்.தாணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.