ஆலியாபட் காதல் பாடல் - ரகசியம் காக்கும் ராஜமவுலி
ADDED : 1314 days ago
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய்தேவ்கன், சமுத்திரகனி என பலரது நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். வருகிற 25-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பல பாடல்களை வெளியிட்டுள்ள ராஜமவுலி, ஒரு முக்கிய பாடல் குறித்த தகவலை இதுவரை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
அதாவது ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார் பாலிவுட் நடிகை ஆலியாபட். கதைப்படி ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவருக்கு இப்படத்தில் ஒரு தனி காதல் பாடல் உள்ளதாம். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த பாடலை வெளியிடாமல் வைத்துள்ளாராம் ராஜமவுலி. அதன்காரணமாகவே படத்தின் பிரமோசனில்கூட அப்பாடல் குறித்து யாரும் தகவல் வெளியிட வேண்டாம் என்றும் நடிகர் நடிகைகளை கேட்டுக்கொண்டாராம்.