சிரஞ்சீவி படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ்
ADDED : 1300 days ago
தற்போது தெலுங்கில் விராட பருவம், பிளட் மேரி போன்ற படங்களில் நடித்துள்ள நிவேதா பெத்துராஜ் அடுத்தபடியாக சிரஞ்சீவி நடிக்கும் 154வது படத்தில் நடிக்கப்போவதாக கோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆச்சாரியா படத்தை அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை பாபி இயக்குகிறார். இந்தப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு இதற்கு முன்பு தெலுங்கில் நடித்த படங்களை விட இந்த படத்தில் அவர் கவர்ச்சிகரமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.