உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார் விபத்தில் தெலுங்கு நடிகை பலி

கார் விபத்தில் தெலுங்கு நடிகை பலி

வேகமாக வளர்ந்து வந்த தெலுங்கு நடிகை காயத்ரி. யூ டியூப் மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர். பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல் விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு வீட்டுக்கு காரில் திரும்பி உள்ளார்.

கட்சிபவுலி என்கிற இடத்தின் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 26. காயத்ரியுடன் காரில் வந்த நண்பர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காயத்ரி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாரா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !