உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அர்ஜூன் தாஸ், அன்னா பென் நடிப்பில் 'கான் சிட்டி'

அர்ஜூன் தாஸ், அன்னா பென் நடிப்பில் 'கான் சிட்டி'

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கான் சிட்டி'. யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். முழுமையான பேமிலி எண்டர்டெயினராக உருவாகிறது. படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

நகரப் பின்னணியில், ஆபிஸ் பேக்குடன் அர்ஜூன் தாஸ் அவரைச் சுற்றி ஹேண்ட் பேக்குடன் அன்னா பென், பயணப்பெட்டி பையுடன் யோகிபாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோருடன் வீல் சேரில் ஒரு வெற்றிக் கோப்பையுடன் குழந்தை அகிலன் என ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் எமோஷனல் பக்கத்தை வெளிப்படுத்துவதாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

இதுவரை படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !