ஜன 21ல் சுந்தர்.சி, விஷால் படத்தின் முதல் பார்வை வெளியீடு
ADDED : 25 minutes ago
இயக்குனர் சுந்தர்.சி தற்போது நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ஒருபக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. மற்றொருபுறம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் பணிகளும் துவங்கி உள்ளன.
ஆம்பள, ஆக் ஷன், மத கஜ ராஜா ஆகிய படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக விஷால், சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளனர். இவர்களுடன் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதியும் பணியாற்றுகிறார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை புரொமோ வீடியோவை நாளை ஜனவரி 21ம் தேதியன்று மாலை 6 மணியளவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.